ETV Bharat / state

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து!

பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, டிசம்பர் 28ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து

author img

By

Published : Dec 25, 2022, 3:47 PM IST

மதுரை: பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் இருந்து டிசம்பர் 25, 26, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) மற்றும் டிசம்பர் 26, 27, 28 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்களில் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 26 முதல் 28 வரை திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில் புறப்பட வேண்டிய, வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 48465 அலைபேசி எண்ணுடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 44307 என்ற அலைபேசி எண்ணுடனும் செயல்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ: ஒரே இடத்தில் 1,220 பெண்கள் கும்மியாட்ட அரங்கேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.