மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காகத் தாம்பரம் - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06057) நவம்பர் 12 அன்று மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும்.
-
Festival Special Trains will be operated between #Tambaram and #Tirunelveli to clear the extra rush of passengers during the Deepavali/Chhath Festival. Kindly take a note.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain @RailMinIndia pic.twitter.com/jzFcCuUCXz
— Southern Railway (@GMSRailway) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Festival Special Trains will be operated between #Tambaram and #Tirunelveli to clear the extra rush of passengers during the Deepavali/Chhath Festival. Kindly take a note.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain @RailMinIndia pic.twitter.com/jzFcCuUCXz
— Southern Railway (@GMSRailway) November 11, 2023Festival Special Trains will be operated between #Tambaram and #Tirunelveli to clear the extra rush of passengers during the Deepavali/Chhath Festival. Kindly take a note.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain @RailMinIndia pic.twitter.com/jzFcCuUCXz
— Southern Railway (@GMSRailway) November 11, 2023
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06058) நவம்பர் 13 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் , கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், இந்த ரயில்களில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.