மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைச் சமாளிக்க ராஜபாளையம், தென்காசி வழியாகத் தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06003) ஜனவரி 11, 13, 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும்.
-
Catch the #Tambaram- #Tirunelveli Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Passengers are requested to take note on this and plan your #travel
Link: https://t.co/3YXbRntbZJ#SouthernRailway #FestivalSpecial pic.twitter.com/ytj8bsyrSp
">Catch the #Tambaram- #Tirunelveli Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024
Passengers are requested to take note on this and plan your #travel
Link: https://t.co/3YXbRntbZJ#SouthernRailway #FestivalSpecial pic.twitter.com/ytj8bsyrSpCatch the #Tambaram- #Tirunelveli Pongal Special!
— Southern Railway (@GMSRailway) January 10, 2024
Passengers are requested to take note on this and plan your #travel
Link: https://t.co/3YXbRntbZJ#SouthernRailway #FestivalSpecial pic.twitter.com/ytj8bsyrSp
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06004) ஜனவரி 12, 14, 17 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 02.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.