மதுரை: அனந்தபுரி விரைவு ரயில் மற்றும் தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில்களின் எண்கள் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது என தெற்கு ரயில்வே நேற்று (டிச.15) அறிவித்துள்ளது.
அதன்படி, 'சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16851) மற்றும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16852) ஆகியவற்றின் ரயில் எண்கள் முறையே 16751 மற்றும் 16752 என மாற்றம் செய்யப்படும். சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் (16723) மற்றும் கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் (16724) ஆகியவற்றின் ரயில் எண்கள் 16823 மற்றும் 16824 என மாற்றம் செய்யப்படும்' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அள்ளிக் குவித்த சிறப்பு ரயில்கள் - ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!