மதுரை விமான நிலையத்தில் ரூ. 43 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கேமரா, தொலைத்தொடர்பு வசதி, இரவு நேர தொலை நோக்கி, ஹைமாஸ் லைட் ( உயர் மின்விளக்குகள்), அவசரகால ஆலோசனை கூடம் போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட நடமாடும் கட்டளையிடும் வாகனத்தை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து பேசிய செந்தில்வளவன், “வாகனம் விமான நிலையம் அல்லது அதன் அருகே ஏற்படும் விமானம் விபத்தின் போதும், கடத்தப்படும்போது சம்பவ இடத்திற்கே சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடும். அதேசமயம் உயர் அலுவலர்கள் 11 பேர் வரையில் அமரும் வகையில் மினி கான்பிரன்ஸ் அறை கொண்ட நடமாடும் வாகனமாக செயல்படும்.
இதன்மூலம் விமான விபத்தை கட்டுப்படுத்தவும், விமானங்களை கடத்துவதிலிருந்து பாதுகாக்கவும், விமானத்தில் இருக்கக்கூடிய பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க உதவும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுற்றித்திரியும் 30 யானைகள் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!