மதுரை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு செய்தார். இந்நிலையில் பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து அவற்றில் தளர்வுர்கள் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி நேற்று (ஏப்.13) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரையிலோ அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
தற்போது வெளியாகும் புதிய திரைப்படங்கள் முதல் ஏழு நாள்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளைவிட கூடுதலாக ஒரு காட்சி அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றியும், அனைத்துக் காட்சிகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிடவும் அனுமதி வழங்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளச்சேரி வாக்குச்சாவடி 92இல் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு