ETV Bharat / state

மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி - madurai water supply regulation

மதுரை: மக்கள்தொகை அதிகரிக்கும் காலக்கட்டத்தில் குடிநீர் விநியோகத்தைத் தொலைநோக்கு திட்டங்களோடு முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

madurai water supply
madurai water supply
author img

By

Published : Dec 30, 2020, 6:53 AM IST

சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மாநகராட்சியாக மதுரையே திகழ்கிறது. சீர்மிகு நகரத்திற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தடையற்ற பாதுகாப்பான குடிநீர் விநியோகம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வைகையும், வைகை சார்ந்த குடிநீர்த் திட்டங்களும்தான் மதுரைக்கான ஆதாரமாய்த் திகழ்கின்றன.

மதுரை மாநகரத்திற்கான முதல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் நகர்ப்புற வைகையாற்றின் ஓரமாக ஆரப்பாளையத்தில் கடந்த 1892 ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

அதன் பின்னர், கடந்த 1924ஆம் ஆண்டு கோச்சடையில் தொடங்கப்பட்டது. கடந்த 1970ஆம் ஆண்டு மேலக்கால், தச்சம்பத்து மற்றும் கோச்சடையில் குடிநீர் கிணறுகள் உருவாக்கப்பட்டு, மதுரையின் வடக்குப் பகுதிக்கும், மதுரை மாநகர வைகையின் கீழ்ப் பகுதியான திருப்புவனம், மணலூரில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, மதுரையின் தென் பகுதிக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

சமூக ஆர்வலர்கள் கேள்வி

தற்போது பண்ணைப்பட்டி, மேலக்கால், கோச்சடை, திருப்புவனம், மணலூர் மற்றும் அரசரடியில் உள்ள நீரேற்று நிலையங்கள் வாயிலாக மதுரை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25 லட்சத்து 78 ஆயிரத்து 201. அதன் நகர்ப்புறத்தில் மட்டும் 14 லட்சத்து 44 ஆயிரத்து 176 பேர் வசிக்கின்றனர். குடிநீர் இணைப்புகளைப் பொறுத்தவரை 91 ஆயிரத்து 260 வீடுகளுக்கும், 4 ஆயிரத்து 67 வணிக நிறுவனங்களுக்கும் 361 தொழிற்சாலைகளுக்கும் என, மொத்தம் 96 ஆயிரத்து 48 இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் 1இல் 23 வார்டுகளும், 2இல் 26 வார்டுகளும், 3இல் 25 வார்டுகளும், 4இல் 26 வார்டுகளும் என, மொத்தம் 100 வார்டுகள் உள்ளன.

அனுமதியில்லா குடிநீர் இணைப்புகள்

கடந்த 2016ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் அனுமதியின்றி பெறப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் குறித்து, ஆர்டிஐ மூலமாக தகவல் கோரியிருந்ததாகக் கூறும் சமூக ஆர்வலர் எம்.ஜி.மோகன், சில அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

“மதுரையில் மண்டலம் 2இல் இருந்து மட்டும் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள். அங்கும் மட்டும் 577 குழாய்கள் அனுமதியின்றி இணைக்கப்பட்டுள்ளன. நான்கு வருடங்கள் ஆனாலும்கூட தற்போதும் அதே நிலைதான் அனைத்து மண்டலங்களிலும் உள்ளது”என்கிறார் எம்.ஜி.மோகன்.

மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம்

மதுரை மாநகரில் குடிநீர் விநியோகம்

கடந்த 2010ஆம் ஆண்டு வரை 72 வார்டுகள் மட்டுமே இருந்த நிலையில், பின்னர் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு மேலும் 28 வார்டுகள் உருவாக்கப்பட்டன. வைகை அணையிலிருந்து 115 எம்எல்டியும், ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக 30 எம்எல்டியும், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 10 எம்எல்டியும் என, மொத்தம் 155 எம்எல்டி பெறப்பட்டு நபர் ஒருவருக்கு சராசரியாக நாளொன்றுக்கு 100 லிட்டர் குடிநீர் மதுரை மாநகராட்சியின் மூலமாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இன்றைய தேவை?

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் மூலம் சட்ட விரோதமாக குடிநீர் திருட்டு நடைபெறுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களை அபகரித்து வீடு கட்டிக் கொண்டவர்கள்கூட, தங்களின் அரசியல் செல்வாக்கு காரணமாக உடனடி குடிநீர் இணைப்பு பெற முடிவது கண்டனத்திற்குரியது”என்கிறார் மற்றொரு சமூக ஆர்வலர் நாகேஷ்வரன்.

மதுரை மாநகராட்சியில் மிகப் பரவலாகவே குடிநீர் திருட்டு நடைபெறுகிறது. இதனை மாநகராட்சி கடும் நடவடிக்கைகளின் மூலமாக முறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.

குடிநீர் பற்றாக்குறை

கோடைக்காலங்களில் மதுரை மாநகராட்சியில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறை பொதுமக்களை பெரும் இன்னலுக்குள்ளாக்கி வருகிறது. இதனைத் தடுக்க முல்லைப் பெரியாறிலிருந்து நேரடியாக குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை 1,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலமாக அடுத்த 50 ஆண்டுகளுக்கு மதுரை மக்களின் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைச் சரியாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறும் சமூக ஆர்வலர் மோகன்,”மதுரை மாநகராட்சியில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்பை சரி செய்து, அவற்றிற்கு முறையான வரி வசூல் நடைபெற்றாலே கணிசமான வருவாயை ஈட்ட முடியும். முல்லைப் பெரியாறு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்போது, இதுபோன்ற விசயங்களை மாநகராட்சி கணக்கில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அந்தந்த வார்டுகளில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்களை வேறு வார்டுகளில் வரி வசூல் பணியில் ஈடுபடுத்துவது அவசியம். அதேபோன்று அனைத்து குடிநீர் குழாய் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தினால் பெருமளவு வருவாய் ஈட்ட முடியும்”என்றும் தெரிவிக்கிறார்.

அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள், முறைகேடான தண்ணீர் சுரண்டல் என பல்வேறு சிக்கல்களை மதுரை மாநகராட்சி உடனடியாக கணக்கில் கொண்டு இயங்கினால், பொதுமக்களின் தண்ணீர் தேவையை சிக்கலின்றி நிறைவேற்ற முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.