ETV Bharat / state

நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த தொண்டு அமைப்பு - சமூக ஆர்வலர்கள் பாராட்டு! - மதுரை

மதுரை : திருப்பரங்குன்றம் பகுதியில் உயிருக்குப் போராடிய நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த தொண்டு அமைப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

snake first aid news
author img

By

Published : Nov 6, 2019, 11:29 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு முனியாண்டிபுரம் குடியிருப்புப் பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால், அது உயிருக்குப் போராடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகரைச் சேர்ந்த 'ஊர்வனம்' என்ற அமைப்புக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள், அங்கு வந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டனர்.

பின்னர் அவர்கள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து டாக்டர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர், அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது.

அந்த நல்ல பாம்பை காப்பாற்ற, காயம் பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், அந்தப் பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது. பின்னர் அந்த பாம்பை மீண்டும் 'ஊர்வனம்’ அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.

நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த தொண்டு அமைப்பு

அவர்கள் அந்த பாம்பை, மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்த நல்ல பாம்பை விட்டனர்.

இதையும் படிங்க:

'திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது' - வெடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Intro:திருப்பரங்குன்றம் பகுதியில் உயிர்க்கு போராடிய நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த ஊர்வன என்ற தொண்டு அமைப்பு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
Body:

திருப்பரங்குன்றம் பகுதியில் உயிர்க்கு போராடிய நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த ஊர்வன என்ற தொண்டு அமைப்பு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடியது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள் அங்கு வந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த பாம்பை பாதுகாப்பாக ஒரு பையில் எடுத்து போட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைதொடர்ந்து டாக்டர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது.

அந்த நல்ல பாம்பை காப்பாற்ற வேண்டும் என்றால் காயம் பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 2 மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது. இதற்காக அந்த பாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. காயம் இருந்த இடத்தில் தையல் போடப்பட்டு கட்டப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அந்த பாம்பு நன்றாக ஊர்ந்து செல்கிறதா? என பரிசோதிக்கப்பட்டது. மேலும் ஆட்களை பார்த்ததும் சீறவும் தொடங்கியது. அது தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதை உறுதி செய்த கால்நடை மருத்துவர்கள், பின்னர் அந்த பாம்பை மீண்டும் ஊர்வனம் அமைப்பினரிடம் கொடுத்தனர்.

அவர்கள் அந்த பாம்பை, மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பி்ன்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்த நல்ல பாம்பை விட்டனர்.

உயிர்க்கு போராடிய நல்ல பாம்புக்கு முதலுதவி செய்த ஊர்வன என்ற தொண்டு அமைப்பிற்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.