ETV Bharat / state

இரும்புக் கம்பிகள் முதல் தங்க நகைகள் வரை; கைவரிசை காட்டிய 6 பேர் கும்பல்! - madurai crime news

மதுரை: நத்தம் மேம்பால பணிக்கான இரும்பு கம்பிகளை திருடி விற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரிக்கையில் அவர்கள் தங்கநகைகளைத் திருடி வந்ததும்  அம்பலமாகியுள்ளது.

madurai
author img

By

Published : Nov 18, 2019, 9:55 PM IST

மதுரை நத்தம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தூண்கள் அமைக்க சாலையோரத்தில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இக்கம்பிகளில் சிலவற்றை மதுரை ஊமச்சிகுளம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பால்பாண்டி, வேலு, ஆறுமுகம், பாண்டி, கார்த்திக், மலைச்சாமி ஆகிய ஆறு பேர் அவ்வப்போது திருடி விற்று வந்துள்ளனர்.

இதனையறிந்த சிலர், ஊமச்சிகுளம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஊமச்சிகுளம் தனிப்படை காவல் துறையினர், அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கட்டிட தொழிலாளர்கள் என்ற பேரில் தனியாகவுள்ள வீடுகளில் தங்க நகைகளைத் திருடிவந்ததும் தெரியவந்தது.

நத்தம் மேம்பால பணி

அவர்களிடமிருந்து 32 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல் துறையினர். ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

Intro:*மதுரை நத்தம் பறக்கும் மேம்பால பணி தூண்கள் அமைக்கும் இரும்பு கம்பிகளை திருடி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் கைது வீடு புகுந்து தங்கநகைகளை திருடி வந்ததும் விசாரணையில் அம்பலம் 32 சவரன் தங்க நகை மீட்பு*Body:*மதுரை நத்தம் பறக்கும் மேம்பால பணி தூண்கள் அமைக்கும் இரும்பு கம்பிகளை திருடி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் கைது வீடு புகுந்து தங்கநகைகளை திருடி வந்ததும் விசாரணையில் அம்பலம் 32 சவரன் தங்க நகை மீட்பு*

மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு தமிழக அரசு 900 கோடியில் ரூபாயில் புதியதாக பறக்கும் பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது

இதில் ஆங்காங்கே தூண்கள் அமைக்கும் பணிக்காக சாலையோரத்தில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைத்துள்ளனர்

இதனை நோட்டமிட்ட மதுரை ஊமச்சிகுளம் அம்பேத்கார் தெரு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பால்பாண்டி, வேலு, ஆறுமுகம், பாண்டி, கார்த்திக், மற்றும் மலைச்சாமி ஆகிய 6 பேர் இரும்பு கம்பிகளை திருடி விற்று வந்துள்ளனர்

இதனை அறிந்த மதுரை ஊமச்சிகுளம் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை ஆறு நபர்களும் கட்டிட தொழிலாளர்கள் என்ற போர்வையில் அருகிலுள்ள தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு வீடு புகுந்து பீரோவை உடைத்து தங்க நகைகளை திருடி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது

அவர்களிடமிருந்து இதுவரை 32 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்
உடனடியாக அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு நபர்கள் வீடு புகுந்து திருடி வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.