மதுரை: எளிய விவசாயிகளுக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த கிசான் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 133 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் தானாக முன்வந்து பணத்தை திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை 10 ஆயிரத்து 886 பேரிடமிருந்து ரூ.4.06 கோடி வசூலானது. மேலும் எஞ்சியுள்ள 248 பேரிடம் ரூ.9 லட்சத்தை வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதில் தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லண்டன் செல்கிறாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!