ETV Bharat / state

கரோனா சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை அவசியம் - செல்லூர் ராஜு - மதுரை

மதுரை: கரோனா சிகிச்சை முறையில் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

sellur-raju-inspects-rajaji-government-hospital

author img

By

Published : May 20, 2021, 9:52 PM IST

மதுரையில் கரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே கழிவறை சுத்தம் செய்யப்படுகிறது. குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அடிப்படை வசதிகள் முறையாக இல்லை’ என்று கூறினார்.

மேலும் 'நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஆகிறது. நோயாளியின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை சுத்தப்படுத்திய பின்னரே பிற நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும் கரோனா சிகிச்சை முறையில் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி உள்ளன. இதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

கரோனா சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை அவசியம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

அரசியல் ஸ்டண்ட் என விமர்சனம்
இதற்கிடையே, ராஜாஜி அரசு மருத்துவமனையின் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்ய வந்த எம்.எல்.ஏ செல்லூர் ராஜு, பாதுகாப்பு உடைகளை அணியாமல் மருத்துவமனையின் வெளியே சில நிமிடங்கள் நின்று, பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த பின் உள்ளே சென்றுள்ளார். நாளை (மே19) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ள நிலையில் அவருக்கு முன்னதாக தான் ஆய்வு மேற்கொண்டது போல் செய்தது அரசியல் ஸ்டண்ட் என திமுகவினர் விமர்சனம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.