மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சீமான், அதனை ஒட்டியவர்தான் முதலில் பாதிப்படைவார்.
அச்சட்டத்தினால் ஆபத்து என்னவென்று தெரிந்தனால்தான் விழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வாக்களித்து வெற்றிபெற வைத்த நாட்டு மக்களுக்குப் பணியாற்றுவது மட்டும்தான் ஆட்சியாளர்களின் கடைமையே தவிர, அதை விடுத்து நாட்டின் குடிமகனா என்று கேள்வி கேட்பது கிடையாது.
அமைச்சர் ஜெயக்குமார் குடியுரிமை இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்று ஏளனமாகப் பேசுகிறார். இன்றைக்கு ட்ரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று ஏழு அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்தச் செங்கல்லைக் கொண்டு குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது ஆக்கப்பூர்வமான செயலாக இருந்திருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களை மாட மாளிகையில் வாழ வைக்கப் போகிறீர்களா, தற்போதும் குடிசையில்தான் வாழ்ந்துவருகிறார்கள். குடிசையில் வாழ்ந்துவருபவர்கள் எந்தவித ஆவணங்கள் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார்.
சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பைச் சட்ட மசோதாவாக இயற்றி இருப்பது குறித்த கேள்விக்கு அவர், “தமிழ்நாடு அரசு அதனை முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு அதை ஏற்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
இதையும் படிங்க: '2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே இலக்கு'