ETV Bharat / state

காவிரி ஆற்று மணல் கடத்தல் வழக்கு: ஆட்சியர் விளக்கம் அளிக்க உத்தரவு - கரூர் மாவட்ட ஆட்சியர்

மதுரை: கரூர் மாவட்டம் மண்மங்களம் கிராமங்களில், காவேரி ஆற்றில் மணல் எடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், கரூர் மாவட்ட ஆட்சியர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 14, 2020, 11:28 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கரூர் மாவட்டம் புஞ்சைபுகழூர், தளவாபாளையம் ஆகிய கிராமங்கள் காவிரி ஆற்று நீரை நம்பியே உள்ளன.

பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட இந்த கிராமத்தினர், விவசாய தேவைக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் காவிரி ஆற்றையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் இக்கிராமங்கள் வழியாக செல்லும் காவிரி ஆற்றுப் பகுதியில், சட்டவிரோதமாக பலர் மணல் எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கரூர் மாவட்டம் மண்மங்களம் கிராமங்களின் வழியே செல்லும் காவேரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, "நீதிமன்றம் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த நிலையில் தொடர்ச்சியாக திருட்டு நடைபெறுவது எவ்வாறு? என்ன கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தானாக முன்வந்து ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கக்கூடாது? எனக் கூறிய நீதிபதிகள், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியே மனு அளித்த நிலையில், தாலுகா, மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் காணொலி வாயிலாக ஆஜராகி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.