ETV Bharat / state

முதுநிலை நீட் தேர்வு மையங்களை அதிகரிக்கக் கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நீட் முதுநிலை பட்ட தேர்வு மையங்களின் எண்ணிக்கையை கூடுதலாக அமைத்துத் தரக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.
author img

By

Published : Feb 24, 2021, 10:40 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் நீட் முதுநிலை பட்ட தேர்வு மையங்களின் எண்ணிக்கை உடனடியாக தீர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இரண்டு நாள்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறைய நீட் முதுநிலைப்பட்ட தேர்வர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழ் நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்திற்குள்ளாக தமிழ்நாட்டு மையங்கள் நிரம்பி விட்டதாக தெரிகிறது. ஆகவே தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தை தேர்வு செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பிவிட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அந்த வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டன. இது தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் மனதில் பதட்டத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது.

கரோனா காலம் என்பதால் தேர்வர்கள் வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதும், அங்கு தங்குவதும் மிகக் கடினமான ஒன்றாகும். பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாகச் செல்லும் பெற்றோர் ஆகியோர் கூடுதல் சிரமங்களை எதிர் கொள்வார்கள்.

எனவே தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைக் கணக்கிற் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'நீட் தேர்வுக்காக மாணவர்களின் மனதை அரசியல்வாதிகள் மாற்றக்கூடாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.