மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர் கரோனா தொற்று காலத்தில் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான ஆடைகள், முகக் கவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த் துறையின் முதன்மைச் செயலர் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர், களப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ. 350.29 கோடி அரசு செலவு செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சுமார்100 புலம்பெயர்ந்த தொழிலார்கள் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைப்பு