ETV Bharat / state

தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்களுக்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன - ஆர்.பி. உதயகுமார்

தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

தேவரின் தங்கக் கவச விவகாரத்தில் எங்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன

author img

By

Published : Oct 28, 2022, 7:35 PM IST

மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டி சால்வை அணிவித்து, கேடயம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், 'வட கிழக்குப்பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது. அரசின் மெத்தனப்போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு முறையாக செய்ய வேண்டும். பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்குகிறது. கோவையில் 1998இல் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்தே மக்கள் மீளவில்லை. அதிமுக ஆட்சிக்காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சோற்றில் பூசணிக்காயை மறைப்பதுபோல அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஒன்றும் நடக்கவில்லை எனப்பேசி வருகிறார்.

கோவை சம்பவத்தை நாம் சாதாரணமாக கடந்து போகமுடியாது. அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கோவை சம்பவம் குறித்து முதலமைச்சர் மவுனம் கலைத்துப்பேச வேண்டும். பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கைப்பார்த்தால் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள்.

திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடைமாற்றும் செயல். தமிழுக்கு ஆபத்து என திமுக பேசி வருகிறது. தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால், அதிமுக முதலில் நிற்கும். அதிமுக ஆட்சியில் திமுக அர்த்தமில்லாமல் 40,000 போராட்டங்கள் நடத்தியது.

2017இல் தேவரின் தங்க கவசம் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி மதி நுட்பத்தோடு செயல்பட்டார். தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது மக்களுக்குத்தெரியும். தேனி மாவட்டத்தில் 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதுவே ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி ஒன்றரை இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஓ.பன்னீர்செல்வம் எந்தவொரு தேர்தல்களிலும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும்.

தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்களுக்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன - ஆர்.பி. உதயகுமார்

50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும், வெற்றியையும் சந்தித்துள்ளன. அதிமுகவில் எதுவும் நிரந்தரமில்லை. வீழ்வதும், வெல்வதும் தொண்டர்கள், மக்கள் கையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் கார் வெடிப்பு - என்.ஐ.ஏ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.