மதுரை: மதுரை மாநகராட்சி 70ஆவது வார்டுக்குட்பட்ட நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற தள்ளுவண்டிக்கடைக்காரர் இப்பள்ளத்தில் வண்டியோடு கவிழ்ந்து விழுந்தார். வியாபாரத்திற்காக கொண்டு சென்ற 5ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சோளம், கடலை உள்ளிட்டவை பள்ளத்தில் விழுந்து வீணானதால் வியாபாரி சோகத்தில் மூழ்கினார்.
இதே பள்ளத்தில், வேறு சில வாகன ஓட்டிகளும் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே, மதுரை மாநகராட்சி உடனடியாக இந்தப் பள்ளத்தை மூடி பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் கார் திருட்டு!