ETV Bharat / state

தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக ஆர்.என். சிங் நியமனம்! - ஆர் என் சிங்

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக ஆர்.என்.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.என். சிங் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக நியமனம்

author img

By

Published : Nov 8, 2022, 6:43 PM IST

மதுரை: தெற்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக ஆர்.என்.சிங் பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்திய ரயில்வே பொறியாளர் சேவையில் 1986ஆம் ஆண்டு சேர்ந்தவர்.

இவர் இந்திய ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் பதவிகளான டெல்லி கோட்ட ரயில்வே மேலாளர், இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்துக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில் பாதை நிறுவன நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் ரயில்வே வாரியச்செயலாளர் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானத்துறை முதன்மை நிர்வாக இயக்குநர் ஆகியப்பதவிகளை வகித்து வந்தார்.

சரக்கு போக்குவரத்துக்கு தனி ரயில் பாதை திட்டம், பெரிய பாலங்கள், அதிவேக விரைவு ரயில் போக்குவரத்து போன்ற பெரிய ரயில்வே திட்டங்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பேரனுபவம் வாய்ந்தவர். கடந்த 34 ஆண்டுகளில் ரயில்வே பணிகளில் பல்வேறு மேலாண்மைப் பொறுப்புகளை வகித்தவர்.

திட்ட மேலாண்மை ரயில் போக்குவரத்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புத்திட்டங்கள், முன் திட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றில் பல்வேறு முத்திரைகளைப் பதித்துள்ளார். இவர் ஹரித்வார் அருகே உள்ள ரூர்கி இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார்.

ஹாலந்தில் விபத்து மேலாண்மை, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சிறப்பு மேலாண்மை, பாரிஸில் முன் திட்ட மேலாண்மை, ஆஸ்திரியாவில் இயந்திரவியல் மேலாண்மை, இத்தாலியில் நிர்வாக மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பயிற்சிபெற்றவர் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதையும் படிங்க:சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் அபராதம் செலுத்தாமல் நாடகம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.