துணை வட்டாட்சியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றம் நியமன அடிப்படையில் பணி நியமனம் செய்ய சில நாட்களுக்கு முன்பாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணி நியமனங்களில் தாமதம் ஏற்படுத்தும் நோக்கில் வருவாய் துறை அலுவலர்கள் சிலர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை முறைகேடாக அனுமதியின்றி எடுத்துசென்றதாக கூறப்படுகிறது.
இதனால் நியமன வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நியமன வருவாய் துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு பொய் எனக் கூறி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சக வீரருக்கு ஷாக் கொடுத்த கோலி...! மீண்டும் சாதனைப் பட்டியலில் முதலிடம்!