ETV Bharat / state

ஆயிரமாண்டுகள் பழமையான பாண்டியன் அணையை தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் - மதுரை மக்கள் கோரிக்கை - குருவித்துறை பாண்டியன் அணை

பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழும் இந்த அணை, தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பாண்டியன் கால்வாயை அடிப்படையாகக் கொண்டு, பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட பாசன சட்டம், உலக நீர்ச் சட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்குறிப்பிட்ட சட்ட ஷரத்துகள், குருவித்துறை பெருமாள் கோயிலில் கற்றளிக் கருவறையின் வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணையை தேசிய மரபு சின்னமாக அறிவிக்க கோரிக்கை - இது காலத்தின் கட்டாயமாகும்

author img

By

Published : Feb 7, 2022, 10:30 PM IST

Updated : Feb 8, 2022, 10:24 AM IST

மதுரை மாவட்டம் குருவித்துறை வைகை ஆற்றில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டிய மன்னன் கட்டிய தடுப்பணையைச் சீரமைத்து தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கோயில், குருவித்துறை. இங்குள்ள அருள்மிகு சித்திரரத ஸ்ரீ வல்லபபெருமாள் திருக்கோயில் மிகப்புகழ்பெற்றதாகும். இந்தக்கோயில் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது.

பாண்டிய மன்னனிடம் உழவர்கள் கோரிக்கை

கோயிலிலிருந்து ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் தொலைவில் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பணை ஒன்று, வைகை ஆற்றின் குறுக்கே அரைவட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இது கி.பி.12ஆம் நூற்றாண்டில் அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும்.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணையை தேசிய மரபு சின்னமாக அறிவிக்க கோரிக்கை - இது காலத்தின் கட்டாயமாகும்

வடக்கு-தெற்காக ஓடி வரும் வைகை, இந்த இடத்தில் கிழக்கு-மேற்காகத் திரும்புகிறது. அப்போது ஆற்றில் ஓடி வரும் தண்ணீரோடு, ஆற்று மணலும் வாரி அடிப்பதால், அருகிலுள்ள வேளாண் நிலங்கள் பாழ்படுவது இயல்பான ஒன்றாக இருந்தது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், உழவர்களும் பாண்டிய மன்னனிடம் இதற்கொரு தீர்வு வேண்டி கோரிக்கை விடுக்கின்றனர்.

கரிகாலச் சோழன் அமைத்த கல்லணை போன்ற உருவாக்கம்

வைகையின் அக்குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்த பாண்டிய மன்னனின் அரசு அலுவலர்கள், அங்கு ஒரு தடுப்பணை கட்ட முடிவு செய்கின்றனர். அதனை அரை வட்ட வடிவத்தில், கரிகால் சோழன் அமைத்த கல்லணை போன்று, வெறும் கற்களைக் கொண்டு அதே தொழில்நுட்பத்தில் இந்த அணை அமைக்கின்றனர். விவசாய நிலங்களில் மணல் வாரி இறைக்கப்படுவது தடுக்கப்பட்டு, ஆற்றின் இயல்பான நீரோட்டமும் தடையின்றி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை
ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை

அணை கட்டப்பட்ட பின்பு அங்கிருந்து, உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலமாக அங்கிருந்து சுமார் 10 கி.மீ., தொலைவிலுள்ள தென்கரை பெரிய கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாய்க்கால் ஸ்ரீ வல்லப பேராறு என்றும்; பாண்டியன் கால்வாய் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

உலக நீர்ச் சட்டங்களுக்கு முன்னோடி

பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழும் இந்த அணை, தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பாண்டியன் கால்வாயை அடிப்படையாகக் கொண்டு, பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட பாசனச் சட்டம், உலக நீர்ச் சட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குறிப்பிட்ட சட்ட ஷரத்துகள், குருவித்துறை பெருமாள் கோயிலில் கற்றளிக் கருவறையின் வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை
ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை

இதன் காலம் கி.பி.1117ஆம் ஆண்டாகும் (SII Vol.XIV.No.236). சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட, இத்தடுப்பணை இன்றும் பயன்பாட்டில் இருப்பது வியக்கத்தக்கதாகும்.

பாண்டியன் சிற்றணை: 'நீர் மேலாண்மைக்கான ஆயிரமாண்டுகல் பழமையான அடையாளம்'

வரலாற்றுப் பெருமை சிதைக்கப்படுகிறது:

பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மையை இன்றைக்கும் பறைசாற்றும் இந்தக் கல்லணை, வைகையின் குறுக்கே சுமார் 500 மீட்டர் நீளத்தில் 10 அடி அகலத்தில் சரிவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆழம் சுமாராக 15-லிருந்து 20 அடி இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த அணையின் வடகிழக்கு மூலை கடுமையாகச் சிதைந்துள்ளதுடன், கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை
ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை

மேலும் இந்தப் பகுதிக்கு வரும் நபர்களால் மதுப்பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் ஆங்காங்கே நிறைந்து, இதன் வரலாற்றுப் பெருமை சிதைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த அணையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரைவாசிகளுக்கே இதன் அருமை தெரியாது

இயற்கை ஆர்வலர், தாவரவியல் ஆய்வாளருமான கார்த்திகேயன் பார் கவிதை கூறுகையில், 'சோழ மன்னர்களின் கல்லணை குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், அந்தக் கல்லணையை நாம் காண முடியாது.

ஆயிரமாண்டு பழமையான பாண்டியன் அணை
பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மை

காரணம், அதற்குமேல் நவீன கட்டுமானங்கள் எழுந்துவிட்டன. ஆனால், பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய இந்தக் கல்லணையை இப்போதும் நாம் காணமுடியும்.

அதன் தொழில்நுட்பத்தை எண்ணி, வியக்க முடியும். மதுரை மாவட்டத்தில் இருந்தாலும், மதுரைவாசிகளுக்கே இதன் அருமை தெரியாது என்ற அவலநிலைதான் உள்ளது.

தமிழ்நாடு அரசின் வரலாற்று கடமை

ஆகையால், தற்போது சிதிலமடைந்து வரும் பாண்டியன் அணையைச் சீரமைத்து, தேசிய மரபுச்சின்னமாக அறிவிக்கத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசை வலியுறுத்துவது அவசியம்.

பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மை
பாண்டிய மன்னர்களின் நீர் மேலாண்மை

இந்த அணையின் பெருமையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமன்றி, அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்வது காலத்தின் கட்டாயமாகும்' என்கிறார்.

வரலாற்றுப் பெருமிதத்திற்குரிய பாண்டியன் கல்லணையைச் சீரமைப்பதுடன், அதனைத் தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் வரலாற்று கடமையாகும்.

இதையும் படிங்க: உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை

Last Updated : Feb 8, 2022, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.