ETV Bharat / state

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனையா? - மதுரையில் பரபரப்பு - ரெம்டெசிவர் கள்ளச்சந்தை

மதுரை: ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனையாவதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
author img

By

Published : May 12, 2021, 1:02 PM IST

மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (மே.8) முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகளை போட்டு, அங்கு பணி செய்யும் ஊழியர்களே சட்டவிரோதமாக அவைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு மருந்து பெட்டி ரூபாய் 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர் முறைகேடுகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விற்பனையகத்தில் நேற்று (மே.11) முதல் ரெம்டெசிவிர் டோக்கன் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், தற்போது முறைகேடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

கரோனா நோயாளிகளின் உயிர்க்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.