மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், தமிழ்நாடு காவல் துறையினர் இணைந்து விமான நிலையத்தில் நடைபெறும் கடத்தல் சம்பவத்தை எவ்வாறு தடுத்து, பயணிகளை மீட்பது போன்ற ஒத்திகை நடைபெற்றது.
அவசர ஊர்தி மூலம் தீவிரவாதிகள் கடத்துவது போன்ற நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்பது, தீவிரவாதிகளை பிடிப்பது போன்றவை செயல் முறை ஒத்திகை நடைபெற்றது.