மதுரையில் நேற்று நள்ளிரவில் புதூர் பாரதியார் பிரதான சாலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி படுகொலை ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை புதூர் ராமவர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பதும், அவர் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்திவருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் புதூர் பாரதியார் பிரதான சாலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.