ETV Bharat / state

'100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சியில் அமரமுடியாமல் திமுக பசியுடன் தான் இருக்க வேண்டும்' - ஆர்.பி உதயகுமார் - வருங்கால முதலமைச்சர் வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சியில் அமர முடியாமல் பசியுடன் தான் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியுள்ளார்.

ஆர்.பி உதயகுமார்
ஆர்.பி உதயகுமார்
author img

By

Published : Nov 2, 2020, 8:29 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சியில் பேசுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

இந்தியாவில் இருக்க கூடிய 29 பெரிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான ஆய்வில், இந்தியாவிலேயே இரண்டாம் மாநிலமாக தமிழ்நாடு பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்.

ஆர்.பி உதயகுமார்

கழகத்தின் மீது களங்கம் விளைவிக்கும் வகையிலே, வருங்கால முதலமைச்சர் வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் என எதிர்க்கட்சி விஷக்கிருமிகள் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சியில் அமரமுடியாமல் திமுகவினர் பசியுடன் தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பணத்தை பதுக்குவதற்காக ஓபிஆர் மொரீசியஸ் பயணம் - தங்க தமிழ்செல்வன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.