ETV Bharat / state

Rajiv Gandhi assassination case: பரோலில் வெளிவந்தார் ரவிசந்திரன் - ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிசந்திரன்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரன் இன்று (நவ. 16) பரோலில் வெளிவந்தார்.

Rajiv Gandhi assassination case  Rajiv Gandhi  Rajiv Gandhi murder case  Ravichandran released on parole  Rajiv Gandhi murderer released on parole  ராஜீவ்காந்தி கொலை வழக்கு  ராஜீவ்காந்தி  பரோலில் வெளிவந்தார் ரவிசந்திரன்  ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிசந்திரன்  ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிசந்திரனுக்கு பரோல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
author img

By

Published : Nov 16, 2021, 8:07 PM IST

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இதில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசின் உள் துறைச் செயலர் உத்தரவிட்டிருந்தார்.

ரவிச்சந்திரனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் இந்த பரோல் வழங்கப்பட்டது. ரவிச்சந்திரன் நேற்று (நவ. 15) வெளிவருவார் என அறிவித்திருந்த நிலையில், சில பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (நவ. 16) விடுவிக்கப்பட்டார்.

பரோலில் வெளிவந்தார் ரவிசந்திரன்

இது குறித்து ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் திருமுருகன் கூறும்போது, “ரவிச்சந்திரனின் தாயார், உடல்நலக்குறைவு காரணமாக ரவிச்சந்திரனை, விடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு மீது விசாரணை செய்யப்பட்டு 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவ. 16) மதுரை மத்திய சிறையில் இருந்து, தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பரோலில் விடுவிக்கப்பட்டு இருப்பதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

நீண்ட கால பரோல் வழங்க வேண்டி ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனுக்கு நீண்டகால ப்ரோல் வழங்க ஆளுநர் தாமதிக்கும் பட்சத்தில், தமிழ்நாடு முதலமைச்சரே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி நீண்டகால பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: MK Stalin relief fund for farmers: ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்; சாலைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.