இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது தாயார் ராஜேஸ்வரியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். சிறை நிர்வாகம் இதற்கான அனுமதியை மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரன், பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 10ஆம் முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு 15 நாள்களுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து மதுரை மத்திய சிறைத்துறை நிர்வாகம் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுப்பு வழங்கியது.
பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் மாணவர்கள் சுற்றுப்பயணம்
இதனையடுத்து ரவிச்சந்திரன் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.