மதுரை கள்ளந்திரி அருகே நாயக்கன்பட்டியில் நியாயவிலைக்கடை செயல்பட்டுவருகிறது. இதில் சமீபகாலமாக பொதுமக்களுக்கு எந்த பொருட்களும் கிடைக்காமல் இருந்துவந்த நிலையில் மினி வேனில் பொருட்களை இரண்டு பேர் கடத்துவதற்காக ஏற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் வேனை சிறைபிடித்தனர்.
அதில் இருந்த இரண்டு பேரும் தப்பி பொதுமக்களை கண்டவுடன் தப்பியோடினர். இதுகுறித்து, தகவல் அறிந்துவந்த உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கடை ஊழியர் பிரதீப் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.