மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்களால் தன்னெழுச்சியாக இடப்பட்ட இரண்டு கோடியே ஐந்து லட்சம் கையெழுத்துகள் இடப்பட்ட பதிவேடுகள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் எதிர்விளைவுகளைக் கண்டு அஞ்சுவதுதான்.
இது நாடு தழுவிய பிரச்னை, தலைவர்கள் சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்கள். காஷ்மீர் விவகாரம் பெரும் சர்ச்சையாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்துக்கு ஐநா பொதுச் செயலாளர் தாமாக முன்வந்து தீர்வு காண முயன்றதையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் பேரணியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள்!