ETV Bharat / state

'ஸ்டாலினைப் பொறுத்தவரை மாற்றிமாற்றி பேசுவது வாடிக்கை' - அமைச்சர் ஜெயக்குமார் கடும்தாக்கு! - madurai news

மதுரை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும். அதுபோல தான் நடிகர் ரஜினிக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடுவுள்ளதால் இமய மலைக்குச் சென்றுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Oct 13, 2019, 7:21 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும் அதுபோல தான் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆன்மிகத்தில் ஈடுபாடுவுள்ளது. அதனால் தான் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த விலையில் உணவு மற்றும் மருந்துகள் கொடுப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

’தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதேபோல் சமூகநீதிக்கான மாநிலமாகவும் உள்ளது. இதற்கு காரணம் மாநிலத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கியவர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அத்தனைபேருக்கும் நல்வாழ்வுத் திட்டங்கள் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நம்மைப் பார்த்து உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மடிக்கணினி வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நாம் தொடர்ச்சியாக இலவச மடிக்கணினி திட்டத்தை வழங்குகிறோம்’ என்றார்.

மேலும் 100 நாள் வேலை வாய்ப்பை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தவில்லை என ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, 'கிராமப்புறம் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நமது அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்களுக்குத் தெரியாது. ஸ்டாலினுக்கு குற்றம் சொல்வது தான் வேலை. பிரதமர் வரும்போது Go Back Modi என்று கூறுவார். ஸ்டாலினை பொறுத்தவரை நேற்று ஒன்று பேசுவது, இன்று ஒன்று பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

சீன அதிபர் சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி வேட்டி கட்டியது பற்றிய கேள்விக்கு, ‘உலக அளவில் தமிழ்நாடு பிரதிபலிக்கிறது. உலக அளவில் சென்னை பிரதிபலிக்கிறது. உலக அளவில் மாம்மல்லபுறம் பிரதிபலிக்கிறது. நமது கலாசாரம் அனைத்தும் தமிழ்நாடு மற்றும் சீனா இடையே பேசப்பட்டுள்ளது. எந்தத் தலைவர்களும் வந்தால் வடமாநிலங்களுக்குத்தான் செல்வார்கள். தற்போது தெற்கே கடைக்கோடியில் உள்ள மாமல்லபுரத்தில் வந்து உள்ளார்கள் என்றால், எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் பாரம்பரிய முறைப்படி முதலமைச்சர் சிறப்பான வரவேற்பை செய்திருந்தார் என்பதுவே’ என்றார்.

இதையும் படிங்க:கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:மதுரை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:Body:மதுரை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

_ரஜினிகாந்த் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு_

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும் ஆன்மிகத்தில் ஈடுபட்டு அவர் இமயமலைக்கு வழக்கம்போல் சென்றுள்ளார் இதில் கருத்து கூற முடியாது.

_மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் குறைந்த விலையில் உணவு மற்றும் மருந்துகள் கொடுப்பது பற்றிய கேள்விக்கு_

தமிழ்நாடு அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் முன்னோடி உள்ளது.

குறிப்பாக சமூகநீதிக்கான மாநிலமாகவும் உள்ளது. இதற்கு காரணம் நமது அதிமுக அரசு நம்முடைய மாநிலத்தில் தான் ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், அதேபோல் பின்தங்கியவர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அத்தனைபேருக்கும் நல்வாழ்வுத் திட்டங்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

முதலமைச்சர் அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை எல்லாம் சிந்தாமல் சிதறாமல் எல்லா திட்டங்களும் மக்களை சென்றடையும் பணியில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அரசின் நிதி ஒதுக்கீடு 75000 கோடி அளவிற்கு மானியம் ஆகவே ஏழை எளிய மக்களுக்கு வழங்குகின்ற ஒரு அரசாகவே இந்த அரசு இருந்துள்ளது.

குறிப்பாக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் சிறந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினாள் நம்மை பார்த்து தான் எல்லா மாநிலங்களும் சரி மானிய விலையில் உணவகம் ஐந்து ரூபாய் இருந்தாலே உணவு சாப்பிட முடியும் என்ற நிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். அதிலும் நமது மாநிலம் தான் முன்னோடி அதுமட்டுமில்லை விலையில்லா மிதிவண்டி மற்றும் 16 வகையான பொருட்கள் எந்த மாநிலத்திலும் கொடுத்தது கிடையாது. நாம் மட்டும்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மை பார்த்து சில மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் கூட மடிக்கணினி கொண்டுவரவேண்டும் என்று நினைத்து அந்தத் திட்டமே செயல்படுத்த முடியாமல் ஆகிவிட்டது நாம் மட்டும் தான் தொடர்ச்சியாக செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.

_100 நாள் வேலை வாய்ப்பை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தவில்லை ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு_

கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக வேண்டும் என்று அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மற்றும் அதை சிறப்பாக செயல்படுத்த அறிவுரைகள் வழங்கி வருகிறோம் நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிராமப்புற பொருளாதாரம் குடி பராமரிப்பு பணி எல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டம் தற்போது முதல்வர் முழுமையாக 1500 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டு இந்த பணிகளை செயல்படுத்துகிறார்.

கிராமப் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக இது அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்களுக்குத் தெரியாது ஸ்டாலினுக்கு குற்றம் சொல்வது தான் வேலை பிரதமர் முன்பு வரும்போது Go Back என்று கூறுவார் தற்போது come back என்று கூறுவார் பிரதமர் சென்ற பின்பு அவரை வசைபாட தொடங்குவார் ஸ்டாலினை பொருத்தவரை நேற்று ஒன்று பேசுவது இன்று ஒன்று பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

_சீனப் பிரதமர் சந்திப்பின்போது நரேந்திர மோடி வேட்டி கட்டி எது பற்றிய கேள்விக்கு_

உலக அளவில் தமிழ்நாடு பிரதிபலிக்கிறது உலக அளவில் சென்னை பிரதிபலிக்கிறது உலக அளவில் மாம்மல்லபுறம் பிரதிபலிக்கிறது நமது கலாச்சாரம் அனைத்தும் தமிழ்நாடு மற்றும் சீனா இடையே பேசப்பட்டுள்ளது.

எந்த தலைவர்களும் வந்தால் வடமாநிலங்களுக்கு தான் செல்வார்கள் தற்போது தெற்கே கடைக்கோடியில் உள்ள மாமல்லபுரத்தில் வந்து உள்ளார்கள் என்றால் எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு முதல்வர் சிறப்பாக செய்திருந்தார்.

அதனால் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை எப்படியாவது குற்றம் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த குற்றத்தை அவர் கூறிவருகிறார்.

தமிழர் நாகரீகம் என்பதை மாண்புமிகு பிரதமர் உணர்ந்திருக்கிறார் அதனால்தான் அவருடைய உரையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து தொன்மையான மொழி தமிழ்மொழி என்பதை பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார் அவர் மட்டும் கூறவில்லை நாட்டினுடைய ஜனாதிபதி கூறியுள்ளார் நம் நாட்டின் நிதி துறை அமைச்சர் கூறியுள்ளார் பாராளுமன்றத்தில் தமிழுக்காக சில விஷயங்களை செய்துள்ளனர் நமது உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பல விஷயங்களை கூறியுள்ளார் தற்போது உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற ஒரு மொழியாக இருப்பதினால் அதை பெரிய அளவில் நமது மத்திய அரசு கொண்டு சென்று கொண்டிருக்கிறது எனவே பிரதமர் மோடி வேஷ்டிகள் வந்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் எல்லோரும் மகிழ்ச்சி கConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.