ETV Bharat / state

'உதயநிதியை வைத்து திமுக நாடகமாடுகிறது' - ராஜன் செல்லப்பா

author img

By

Published : Aug 17, 2020, 4:22 PM IST

மதுரை: திமுகவில் இளைஞர்களே இல்லையென்றும், அதனால்தான் உதயநிதியை அறிமுகப்படுத்தி திமுக நாடகம் ஆடிவருகிறது என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை செய்திகள்  ராஜன் செல்லப்பா  அதிமுக  madurai news in tamil  madurai latest news  rajan sellappa
'உதயநிதியை வைத்து திமுக நாடகமாடுகிறது'- ராஜன் செல்லப்பா

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜன் செல்லப்பா, தற்போது திமுகவில் இளைஞர்களே கிடையாது. அதனால்தான் உதயநிதியை அறிமுகப்படுத்தி நாடகம் ஆடி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பலதரப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் பெருமளவு பயன்பெற்று வருகின்றனர். மதச்சார்பற்ற அரசாக செயல்படும் தமிழ்நாடு அரசு, மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: 2ஆவது தலைநகர் மதுரை: எம்ஜிஆரின் கனவை நனவாக்க விரும்பும் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.