ETV Bharat / state

தனியார்மயமானால் 10 மடங்கு கட்டணம் உயரும் - ரயில்வே தொழிற்சங்கம் - ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறை தனியார்மயமானால் கட்டணம் பத்து மடங்காக உயர்ந்து, நேரடியாக மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவித்து ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் பேசுவது தொடர்பான காணொலி

author img

By

Published : Sep 22, 2021, 9:36 AM IST

மதுரை: ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், எஸ்.ஆர்.இ.எஸ்., என்.எஃப்.ஐ.ஆர். ஆகிய தொழிற்சங்கங்கங்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் எஸ்.ஆர்.இ.எஸ். சங்கப் பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம் செய்தியாளரிடம் பேசுகையில், “ரயில்வே சொத்துகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் ஒன்றிய அரசின் முயற்சியைக் கைவிட வேண்டும். எலக்ட்ரிக்கல் பிரிவை தனியார்மயமாக்குவது கூடாது.

ரயில்வே தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் பேசுவது தொடர்பான காணொலி

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கினால் 10 மடங்கு பயணக் கட்டணம் உயரக்கூடும். இது நேரடியாகப் பொதுமக்களைப் பாதிக்கும்” என்றார். இதில் மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், ரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நாங்களும் படிக்க விரும்புகிறோம் - நரிக்குறவர்களின் ஏக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.