மதுரை ரயில் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு நுழைவுவாயில்கள் அமைந்துள்ளன. மதுரையின் மேற்குப் பகுதியிலிருந்து வருகின்ற பயணிகளின் வசதிக்காக மேற்கு நுழைவுவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்ட்டர் அருகே ரயில் பயணச்சீட்டு பதிவு தொடர்பான அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு என்பதற்குப் பதிலாக 'பய சீட்டு' என பிழையோடு எழுதப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "நீ கருப்பாக இருப்பதால் உனக்கு சாமி கும்பிட அனுமதி இல்லை" கோயிலில் நடந்த கொடூர சம்பவம்!