ETV Bharat / state

தனியார் நிறுவனங்களில் ஆக்ஸிஜன் கொள்முதல் - மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு! - madurai district news

மதுரையில் உள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் ஆக்சிஜன் கொள்முதல் - மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு!

author img

By

Published : May 17, 2021, 12:06 PM IST

மதுரை: கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் ஆக்ஸிஜன் தேவையுடன் வருகிற சூழ்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

தற்போது, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆக்ஸிஜனும் வராத காரணத்தினால், ஆக்ஸிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனை முன்பு பல மணி நேரம் காத்திருக்கும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. மேலும், சிகிச்சை பெறும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனால் மட்டுமே காத்திருப்போர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.

தனியார் நிறுவனங்களில் ஆக்ஸிஜன் கொள்முதல் - மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு!

மதுரை மாவட்ட நிர்வாகம் ஒத்தக்கடை மற்றும் கப்பலூரில் உள்ள தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து சிலிண்டர்களை கொள்முதல் செய்து ஆட்சியர் அலுவலக சேமிப்பு கிடங்கில் வைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சிலிண்டர்களைப் பெறுவதற்கு வசதியாக வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.