ETV Bharat / state

நோய்த்தொற்று விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் யாருக்கும் குரங்கு அம்மை இல்லை, பொதுமக்கள் நோய்த்தொற்று விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
நோய்த்தொற்று விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : May 29, 2022, 9:44 PM IST

மதுரை : அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மருத்துவமனை முதல்வர் இரத்தினவேல் முன்னிலை வகிக்க நடைபெற்ற அந்த ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசினார்.

அப்போது, “ தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டும் சிறிய அளவிலான பாதிப்பு உள்ளது. மற்ற மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.

வெளி மாநிலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் குறித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது. தமிழகம் வந்த சில மாணவர்களுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை. நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மீண்டும் வராமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக விடுபட்ட தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தானாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை வந்துள்ளது. ஆனால் குரங்கு அம்மை இதுவரை இந்தியாவில் யாருக்கும் இல்லை. தொடர்ந்து கண்கணித்து கொண்டு இருக்கிறோம். பொதுமக்கள் நோய்த்தொற்று விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் அரசு கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இதனால் தான் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள் சேர்க்கைக்கான வகுப்பு இராமநாதபுரத்தில் தொடங்கபட்டுள்ளது எய்ம்ஸ் கட்டுமான பணி விரைந்து தொடங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

நோய்த்தொற்று விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
எய்ம்ஸ் பணி தாமதமாவது வருத்தம் அளிக்கிறது என்றாலும் பணிகள் அனைத்தும் முடிவுற்று அது செயல்பாட்டிற்கு வரும் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மதுரை எய்ம்ஸ் அமையும். மருத்துவமனைகளில் தீ விபத்து குறித்து கவனமாக இருக்க வேண்டும். தீ தடுப்பு நடவடிக்கைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது” என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லை; ஆனால்...' - பீடிகை போட்ட ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.