ETV Bharat / state

மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகையால் பொதுமக்கள் அச்சம்! - மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகை

மதுரை: தத்தனேரி மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகை
மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகை
author img

By

Published : May 27, 2021, 7:22 AM IST

மதுரை மாநகராட்சியில் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கி வருகின்றன. தற்போது தத்தனேரி மயானத்தில் அதிகமான சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மின் மயானம் இரவும், பகலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

மதுரை தத்தனேரி மின்மயானத்தில் தொடர்ந்து எரியூட்டப்படும் கரோனா சடலங்களால் வெளியேறும் புகை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வீடுகள் முழுவதும் பரவுகின்றன. இதனால் கரோனா தொற்று ஏற்படும் என, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "தினமும் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் 60க்கும் மேற்பட்ட கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகை

கடந்த சில தினங்களாக, தத்தனேரி மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகை சுற்று வட்டாரப் பகுதியான செல்லூர், தாகூர் நகர், கீழ கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் பரவுகின்றன. குறிப்பாக, கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, எரிந்த பைகளின் கழிவுகள் எங்கள் பகுதி முழுவதும் விழுந்துவருகின்றன" என்றனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.