மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கொடிமர தெரு பகுதியில், வீதியில் அமர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அநீதியை ஒழித்து நீதியை நிலை நாட்டுவோம் என்ற கோஷத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறக் கோரியும், அச்சட்டத்தை அகற்றும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும், எங்களுடைய போராட்டம் குடும்பத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும் என போராட்டத்தின்போது குரல் எழுப்பப்பட்டது . போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் அமித் ஷாவின் அராஜகத்தை கண்டிக்கிறோம் என பதாகைகளை ஏந்தியிருந்தனர்.