ETV Bharat / state

டாஸ்மாக் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - உரிய ரசீது

மதுபான கடைகளின் விதிப்படி விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்கப்படவேண்டும். ஆனால் இதை முறைப்படி விற்பனை பிரதிநிதிகள் கடைபிடிப்பதில்லை. தொடர்ச்சியாக மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும் வழக்குகளும் வருகின்றன.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Jan 21, 2021, 4:41 PM IST

மதுரை: மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும், அதிக விலைக்கு விற்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. மதுபான கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான கடைகளில் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்கி போலி மதுபான விற்பனையை தடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜன.21) நீதிபதிகள் M.M சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

மதுபான கடைகளின் விதிப்படி விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்கப்படவேண்டும். ஆனால் இதை முறைப்படி விற்பனை பிரதிநிதிகள் கடைபிடிப்பதில்லை. தொடர்ச்சியாக மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும் வழக்குகளும் வருகின்றன.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு கண்டிப்பாக உரிய ரசீது வழங்க வேண்டும். மதுபான விலை பட்டியலை ஒவ்வொரு கடையின் முன்பும் அனைவருக்கும் தெரியும் படி வைக்க வேண்டும்.

விற்பனை ரசீதுக்கான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இது முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடைகளிலும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சுற்றறிக்கை அனுப்பியதற்கான ஆவணங்கள், எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.