சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சமீபத்தில் அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை கமல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கமலின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சில கரோனா அறிகுறிகளுடன் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாசிட்டிவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவரும் கமலின் உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல் ஹாசன் விரைவில் உடல் நலம் தேறி குணமடைய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் கமல் ஹாசனுக்கு கரோனா - விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து