ETV Bharat / state

ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் பணம் பிடித்தம் - தனியார் நிதி நிறுவனத்தின் அடாவடி

மதுரை: ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் பணத்தைப் பிடித்தம் செய்த தனியார் நிதி நிறுவனத்தால் அதன் வாடிக்கையாளர் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் பணம் பிடித்தம்
ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் பணம் பிடித்தம்
author img

By

Published : Apr 28, 2021, 6:54 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் வேளாண் பணி செய்துவருகிறார். தனது சொந்த தேவைக்காக மதுரை செல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 2019 ஜூலை 2ஆம் தேதியன்று 25 ஆயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்று ஆறு மாத தவணையைச் சரியாகச் செலுத்திவந்துள்ளார்.

அதன் பின்பு கரோனா காலத்தில் தவணையைச் சரிவர செலுத்த இயலவில்லை.

இந்நிலையில் தனது மகனின் மருத்துவச் செலவுக்காகத் தன்னிடம் இருந்த நகையை அடைமானம் வைத்து 40 ஆயிரம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்தார். அந்தப் பணம் முழுவதையும் ஒரே தவணையாக 2021 பிப்ரவரி 17 அன்று தனியார் நிதி நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது.

இது குறித்து பேசிய சிவகுமார், "ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையைப் பிடித்தம் செய்தது எனக்குப் பெரும் மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது.

அந்த நிதி நிறுவன கிளையில் சென்று கேட்டபோது அங்குள்ள அலுவலர்கள் ஒருமையாகவும் தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.

இதனால் நான் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். மேலும் 25 ஆயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்தவேண்டி இன்றுவரை குறுஞ்செய்தியும் வருகிறது" என்றார் வேதனை தோய்ந்த குரலில்.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பணமோசடி செய்யும் வடமாநிலத்தவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.