ETV Bharat / state

முதன்மை கல்வி அலுவலக சுற்று சுவர் இடிந்து விபத்து - வாகனங்கள் சேதம் - Police investigation

மதுரை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

Primary Education Office Round Wall Collapse Accident - Damage to Vehicles

author img

By

Published : Mar 4, 2021, 5:29 AM IST

மதுரை தமுக்கம் மைதானத்திற்கு எதிர் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இயங்கிவருகிறது. நேற்று (மார்ச் 3) இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சுவர் நீண்ட நாள்களாக பழுதடைந்து இருந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று காலையில்ஆட்கள் யாரும் வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: அமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான 'வெற்றி' சினிமாஸில் திடீர் ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.