மதுரை: படிப்பதற்கு கடினமாக இருப்பதால் குறுக்குவழியில் ஈடுபடுகின்றனர் என நீட் தேர்வு ஆள்மாறட்ட மோசடி குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நேர்மையானவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் இடம் கொடுக்கும் தவறான பாதையில் யார் சென்றாலும் எந்த வகையில் சென்றாலும் அதற்கான பலனை அடைவார்கள்.மிகப்பெரிய குடும்பத்தை சார்ந்தவர்களும் மருத்துவர்களும் கூட தவறு செய்து அதில் மாட்டிக் கொள்கின்றனர்.
நீட் என்பது கல்வி சார்ந்த ஒரு விஷயம் ஆதலால் படித்து முன்னேற வேண்டும் குறுக்கு வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது எனக் கூறினார்.
மேலும், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தனியார்மயமாக்கல் குறித்து பேசிய பிரேமலதா, ''ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் தனியார் துறையில் தான் இயங்குகின்றன ரயில்வே துறை இந்தியாவின் மிகப் பெரிய முதுகெலும்பு போன்றது. தொழிலாளர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை