ETV Bharat / state

CMA-Inter Exam: தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது அப்பட்டமான அநீதி - சு. வெங்கடேசன் - Institute of Cost Accountants of India CMA inter exams Preference given to Hindi

சிஎம்ஏ தேர்வுகளில் இந்தியில் எழுதுகிறவர்கள் தட்டச்சு (அ) எழுத்துப்பூர்வமாகத் தரலாம். ஆனால், மற்றவர்கள் தட்டச்சு மட்டும்தான் செய்ய வேண்டும். ஒரே தேர்வுக்கு இந்தி மாணவர்களுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் தரப்படுவது ஏன்? தேர்வு விதியை உடனே மாற்ற வேண்டும் என மதுரை எம்பி சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சிஎம்ஏ தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது அப்பட்டமான அநீதி

author img

By

Published : Dec 27, 2021, 6:07 PM IST

மதுரை : இந்தியில் தேர்வு எழுதுவோருக்கும் பிற மொழி தேர்வர்களுக்கும் சிஎம்ஏ தேர்வுகளில் அப்பட்டமான பாரபட்சம் பின்பற்றப்படுகிறது. இந்த அநீதியான விதிமுறைகளை அகற்ற வேண்டுமென சு. வெங்கடேசன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "CMA (Inter) தேர்வுகளில் பாரபட்சம் இருக்கிறது. இது குறித்து (Institute of Cost Accountants of India) இந்திய செலவு கணக்காளர்கள் கல்லூரி நிர்வாகத் தலைவர் பி. ராஜு ஐயர், துணைத் தலைவர் விஜேந்தர் சர்மா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் சாரம் இது.

இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்

"மேற்கண்ட தேர்வை எழுதுகிறவர்கள், தேர்வர்களின் பெற்றோர்கள் அணுகித் தேர்வு முறைமையில் உள்ள பாரபட்சத்தைக் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். நானும் அந்தத் தேர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைப் பார்த்தேன். அப்பட்டமான பாரபட்சம் அதில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த அறிவிக்கையின் 13ஆவது அம்சம் 'இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்துப்பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்' என்று அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
சு. வெங்கடேசன் எம்பி

இந்தியல்லாத மொழித் தேர்வர்கள் அதாவது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்கள் கணினி தட்டச்சு வாயிலாக விளக்க முறைசார் கேள்விகளுக்கு விடைகள் தர வேண்டும். இதில் முன்னர் 40/100 மதிப்பெண்கள் மட்டுமே தரப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு தற்போது 60/100 என விளக்க முறை கேள்விகளுக்கான மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வழிமுறை எதனால்?

தட்டச்சு வாயிலாகவே விடைகளை அளிக்க வேண்டும் என்கிற பாரபட்சம் ஆங்கில வழி தேர்வர்களுக்குச் சிரமத்தைத் தருவதோடு மதிப்பெண்களையும் குறைத்துவிடும் என்ற அச்சம் உள்ளது. இந்தி மொழியில் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு வழிமுறை எதனால் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இல்லாத இந்த விதிமுறை இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு, மதிப்பெண்களும் உயர்த்தப்பட்டது ஏன்?

ஏன் இந்தி அல்லாத மொழியில் எழுதுகிறவரின் எழுத்துப்பூர்வ விடைத்தாள் எடுத்துக்கொள்ளப்படாது? எப்படி ஒரே தேர்வுக்கு இரண்டு வழிமுறைகள், இரண்டு விதமான விதிகள் இருக்க முடியும்? இது எப்படித் தேர்வு எழுதுகிறவர்களுக்குச் சமமான நியதியாக இருக்கும்? இந்தி அல்லாதவர்களுக்குச் சமதள ஆடுகளத்தை எப்படித் தரும்?

சிஎம்ஏ தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பாரபட்சம்

அப்பட்டமான அநீதி

விரைவு தட்டச்சுக்குப் பழகாத இந்தி தேர்வர்கள் வேகமாகக் கையில் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்தி அல்லாத மாணவர்கள் வேறு வழியில்லாமல் அதிக நேரம் எடுத்து தட்டச்சு செய்துதான் கொடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான அநீதி.

குறிப்பாகப் பிரிவு சி & டி-யில் கூடுதல் காலத்தை விழுங்குவது தவிர்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதற்குள் இப்பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: Omicron Test: 'தமிழ்நாட்டில் மரபணு ஆய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.