மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் மீது எழுந்த புகாரின்பேரில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "நான் திமுக சார்பாக சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டேன்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது ஏப்ரல் 5ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த சிலர் என் மீது கொடுக்கப்பட்ட பொய்யான புகாரில் சோழவந்தான் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு திட்டமிட்ட பொய்யான புகாரில் புனையப்பட்ட வழக்கு. எனவே எனக்கு நீதிமன்றம் இந்த வழக்கில் காவல் துறையினர் கைதுசெய்வதிலிருந்து தடுப்பதற்காக முன்பிணை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (ஏப். 17) நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன்பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: 'கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி உள்ளது' - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு