ETV Bharat / state

'திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசினாலோ, ஆடினாலோ அம்புட்டுத்தேன்' - எச்சரித்த உயர் நீதிமன்றம்! - aadal paadal videos

கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில், ஆபாசமான வார்த்தைகளோ அல்லது ஆபாசம் மிகுந்த நடனங்களோ இடம் பெறக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் அங்கம் வகிக்கக்கூடாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை!

author img

By

Published : May 24, 2022, 6:47 PM IST

மதுரை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருக்கும் கோயில்களில் சித்திரை, வைகாசி திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

அதேநேரம், கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரக் கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தமிழ்ச்செல்வி, “கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்தப் பிரச்னைகளும் வராத வண்ணம் மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஆபாசமான நடனங்களோ இடம் பெறக்கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமான வார்த்தைகள் அல்லது ஆபாசமான நடனங்கள் இடம் பெற்றால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இதுகுறித்த விதிமீறல் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையைத் தொடரலாம்” என உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விஸ்மயா வழக்கு: கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.