மதுரை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வாகனம் ஒன்றை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆஜர்படுத்த ரூ. 3000 லஞ்சம் பெற்றுள்ளார்.
இவர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், இந்த வழக்கு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், நீதிபதி வடிவேல் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை காவலர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், பொன்ராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வீடியோ பரவியதையடுத்து, காவலர் பணியிடை நீக்கம்!