மதுரை: கோரிப்பாளையம் அருகே மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி முன்பு நேற்று (நவம்பர் 4) இளைஞர்கள் சிலர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த சாலையில் சென்ற அனைவரும் பீதி அடைந்து சிதறி ஓடினர்.
அக்கல்லூரியில் பயிலும் மகளை அழக்க சென்ற தந்தை ஒருவர், இளைஞர்களின் செயலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மகள் கண் முன்பாகவே தந்தையை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 5) மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஸ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேரையும் செல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் கல்லூரி முன்பு குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்கள்