தமிழ்நாடு முழுவதும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்பொருட்டு கடந்தாண்டு பாலிதீன் கவர்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சமூக செயற்பாட்டாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை பெருங்குடி பகுதியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்வகையில் பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும்வகையில், பெருங்குடியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுடன் தமிழ்நாடு இறையியல் கல்லூரி, லயன்ஸ் கிளப் சார்பாக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெருங்குடியிலிருந்து 'சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்', 'நெகிழியை ஒழிப்போம்', 'நெகிழியை எரிக்காதே', 'புற்றுநோயை உருவாக்காதே' உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெருங்குடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி முழுவதும் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க... சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி: 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்பு