ETV Bharat / state

COA பாடத்திட்டத்தை இணையத்தில் வெளியிடக்கோரிய மனு - முடிவு எடுக்க தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையருக்கு உத்தரவு - madurai bench

மாணவர்கள் நலன் கருதி, கம்பியூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் (COA) தேர்விற்குரிய பாடத் திட்டத்தை இணையதளத்தில் வெளியிடக்கோரிய மனு மீதான விசாரணையில், தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், இரண்டு வாரத்தில் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு, வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்துள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Oct 8, 2021, 7:19 PM IST

மதுரை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோமசங்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'தொழில் நுட்பக் கல்வித்துறையால் ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் கம்பியூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் (COA) சான்றிதழ் பயிற்சி தேர்விற்குரிய பாடங்களைப் புத்தகமாக இதுவரை வெளியிடவில்லை.

இந்தத் தேர்விற்கான பாடத்திட்டத்தை கிராமப்புற மாணவர்கள் தயார் செய்து படித்து, தேர்வு எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல்.

புத்தகமாக வெளியிடும் வரை மாணவர்கள் நலன் கருதி, COA தேர்விற்கான பாடத் திட்டத்தை தாமதமின்றி, தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று (அக்.8) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இரண்டு வாரத்தில் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: சென்ட்ரல் சதுக்கம் பணிகள் - முதலமைச்சர் நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.