ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்ய கோரி மனு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்ய கோரிய வழக்கில் தமிழ்நாடுஅரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்ய  கோரி மனு
அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்ய கோரி மனு
author img

By

Published : Apr 7, 2021, 6:17 PM IST

மதுரையை சேர்ந்த வேரோணிக்கா மேரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் எனது தாயாரை உடல்நல குறைவால் அனுமதித்தோம். கரோனா மற்றும் ரத்த பரிசோதனை செய்வதற்கு கால தாமதமானதல் தனது தாயார் உயிரிழந்தார்.

தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன. அதுபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டால் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்து, குழந்தைகள் சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைகளில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும், குழந்தைகள் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தி 24 மணி நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.