மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேவுள்ள முடிக்கரை கிராமத்திலுள்ள அய்யனார் மற்றும் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என கூறி சிவகங்கை மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆக. 08) நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், எஸ். ஸ்ரீமதி ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் தான் ஜல்லிகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்க அரசாணை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் அரசை அணுகி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: Vignesh Death Case: சிறையில் இருந்த 6 காவலர்களுக்கு ஜாமீன்